வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல் மீட்புவவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் வயல் காணியிலிருந்து மோட்டார் செல் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

ஓமந்தை அரசமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் வெடிபொருள் இருப்பது தொடர்பாக இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதியை சோதனையிட்ட நிலையில் மோட்டார் செல் ஒன்றினை மீட்டுள்ளனர்.

நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த மோட்டார் செல் செயலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey