நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புநுவரெலியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் போது அந்தந்த பிரதேச சுகாதார பரிசோதகர்களிடம் கடிதம் மூலம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குளிரான காலநிலையில் அதிகம் பரவும் ஆபத்து உள்ளமையினால் அதனை தடுக்கும் நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நுவரெலிய நகர மேயர் சந்தன லால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நுவரெலியாவுக்கு வந்தவர்கள் எவ்வித சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தப்படாதவர் என பிரதேசங்களுக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர்களினால் உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடித அனுமதியின்றி எந்த ஒருவொரு நபரும் நுவரெலியாவில் உள்ள எந்த ஒரு விடுதிகளிலும் தங்க அனுமதிக்க வழங்க கூடாதென நுவரெலிய மாநகர சபை மேயர் சந்தன லால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

hey