எதிர்வரும் சில நாட்களில் வட கிழக்கு மாகாணங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டளவியல் திணைக்களம்எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொது மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அத்திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

hey