வவுனியா மாவட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றுஅபிவிருத்திக் குழுக் கூட்டம்

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் நெறிப்படுத்தலில் இணைத் தலைவர்களான வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (18.12.2020) பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்ட சந்தைகளின் நிலமை, கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள், காலநிலை மாற்றம், வருட இறுதிக் கொண்டாட்டங்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் , வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர், சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

hey