வவுனியா நீதிமன்றத்தில் சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியாவில்

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்முனையை சேர்ந்த அவருக்கு நேற்றய தினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த சட்டவாதி வவுனியாவிலிருந்து கல்முனைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை வவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

hey