இலங்கையில் இனிமேல் பொது போக்குவரத்தில் நின்ற நிலையில் பயணம் செல்வதற்கு தடைஇலங்கையில் இனிமேல் பொது போக்குவரத்தில் நின்ற நிலையில் பயணம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பயணிகள் நின்றுக் கொண்டு பயணிக்க வேண்டாம் என சுகாதார சேவை பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த சட்டத்தை மீறி செயற்படும் பேருந்துகளின் உரிமையாளர்கள், நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய சட்டரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொது தலைமையகம் தெரிவித்துள்ளது.

hey