வவுனியாவில் மற்றுமொரு பாடசாலை கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டதுவவுனியா வடக்கு கல்வி வலயத்துக்கு உள்பட்ட புளியங்குளம் இந்துக் கல்லூரி நாளை (டிசெ.16) புதன்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

புளியங்குளம் இந்துக் கல்லூரி மாணவர்களுடன் தொடர்புடையோருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கோரப்பட்டதற்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு உள்பட்ட 5 பாடசாலைகள் ஏற்கனவே மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 4ஆம் திகதிவரை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மூன்றாம் தவணைக்காக நாடுமுழுவதும் பாடசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey