வவுனியாவில் கொரோனா தொ ற்றுக்குள்ளான 7 பேரும் கிளிநொச்சி மு கா மிற்கு அனுப்பி வைப்புகொரோனா தொற்றுக்கு இ லக்காகியுள்ளதாக வவுனியாவில் நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்ட ஏழு பேரும் நேற்று மாலை கிளிநொச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வை க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா – சாளம்பைக்குளம் பகுதியில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு கொவிட் தொ ற்று பரிசோதனைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா நீதிமன்றில் பணியாற்றி வரும் திருநாவற்குளம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 6ஆம் திகதி நீதிபதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணம் அனுப்பிவிட்டு மறுநாள் திரும்பிய நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். ப ரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கற்குழியில் 15 வயது பாடசாலை மாணவியொருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட பெண்ணொருவருக்கும் (25 வயது) பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வவுனியாவில் தொ ற்றுடன் இனங்காணப்பட்ட சாளம்பைக்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட ஏழு பேரும் கிளிநொச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

hey