வவுனியாவில் யூரியா ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து : சாரதி தப்பியோட்டம்வவுனியாவில்

வவுனியா – ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் வாகனமொன்று நேற்று இரவு விபத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அதன் சாரதி தப்பியோடியுள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி யூரியாவை ஏற்றிச் சென்ற வாகனமே ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இதனால் வாகனம் முற்றாக குடை சாய்ந்த நிலையில் அதன் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey