வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்புவவுனியா, சாளம்பைக்குளம்,,,

வவுனியா, சாளம்பைக்குளம் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் ஐவர் இனங்காணப்பட்டதையடுத்து முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இன்று இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கொழும்பு சென்று வந்த நிலையில் கொரோனா தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று (14.12) உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குறித்த கிராமத்தில் இருந்தும் சில மாணவர்கள் முஸ்லிம் மகாவித்தியாலயம் பாடசாலையில் கற்று வருகின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த பாடசாலையிலும் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சாளம்பைக்குளம் கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பலருக்கும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும், அப் பகுதியில் உள்ள அல் அக்ஸா பாடசாலை புதன் கிழமை வரை மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

hey