சற்றுமுன் வெளியாகிய தகவல் யாழில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : முழு விபரம் உள்ளேஉடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் சந்தையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வடக்கு மாகா சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.ஆகதீஸ்வரனை தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவியபோது இதுவரை தமக்கு முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மருதனார்மடத்தில் சேவையில் ஈடுபடும் ஓட்டோ சாரதிகளுக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மருதனார்மடத்தில் மரக்கறி வாணிபத்தில் ஈடுபடுபவரும் ஓட்டோ சாரதியுமான உடுவிலைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றையதினம் சந்தை வியாபாரிகள் மற்றும் உறவினர்கள் என 394 பேருக்கு பி சி ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே 24 சந்தை வியாபாரிகளுக்கும் 7 உறவினர்களுக்கும் தொற்று உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளை அவர்களது மரக்கறிகளை அப்புறப்படுத்துமாறும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் உடுவில் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் சந்தையிலிருந்து அவற்றை அப்புறப்படுத்துவதாக சந்தை வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

hey