வவுனியாவில் நாட்டப்படவுள்ள 3000 க்கு மேற்பட்ட மரங்கள் : முதற்கட்டமாக வீரபுரம் கல்வீரங்குளத்தில் ஆரம்பம்வவுனியாவில்

பசுமை காலநிலை நிதியம் மற்றும் நீர்பாசன அமைச்சின் நிதி பங்களிப்புடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் , பாம் நிறுவனத்தின் சமூக அணித்திறட்டல் செயற்பாட்டினால் முன்னெடுக்கப்படும் குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி திட்டத்தின் பத்தாயிரம் மரங்களை நடும் மரநடுகை வாரம்

சனிக்கிழமை 12 ம் திகதி காலை 8.30 மணியளவில் , வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்வீரன்குளம் பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துள்ளசேன தலைமையில் நடைப்பெற்றது .

இந்நிகழ்வில் உதவி திட்டப்பணிப்பாளர் கெனிசியஸ் , செட்டிகுளம் பிரதேச செயலாளர் சிவகரன் , பாம் நிறுவன பணிப்பாளர் சுனில் தொம்பேபொல , அரச உத்தியோகஸ்தர்கள் , கமநல அமைப்பு தலைவர்கள் , விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர் .

அன்றைய தினத்தில் கல்வீரன் குளம் உட்பட பெரிய நொச்சிக்குளம் , நேரியகுளம் மற்றும் சின்னகுளம் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன . இந்நிகழ்வு 18 ம் திகதிவரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .

hey