வவுனியாவிலிருந்து தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்வடக்கு மாகாணத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இன்றையதினம் (21.05.2020) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக கொ ரோ னா வை ர ஸ் தா க்க த்தின் கா ரணமாக இ.போ.ச பேரூந்துகள் ம ட்டுப்படுத்தபட்டு சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் யாவும் த டை ப்பட்டிருந்தன.

இந் நிலையில் இன்றிலிருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.

பயணம் செய்யும் பொது மக்கள் சு கா தார ந டைமு றைகளை பின்பற்றி முக க் கவ சங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின் பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

hey