வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்வவுனியா நீதிமன்றத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த கப் வாகனம் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் ஒயார், சின்னக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey