வவுனியாவில் கோவிட்-19 அச்சம் காரணமாக குறைந்தளவு பயணிகளுடன் பயணிக்கும் பேரூந்துகள்நாடளாவிய ரீதியில்

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.

இந் நிலையில் கோவிட் – 19 அச்சம் காரணமாக வவுனியா மாவட்டத்திலிலுள்ள மக்கள் பொது போக்குவரத்தினை தவிர்த்து வருவதன் காரணமாக வவுனியாவிலிருந்து தூர பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகளில் குறைந்தளவு பயணிகளுடனே பயணத்தினை மேற்கொள்கின்றன.

வவுனியா மாவட்டத்திலுள்ள பெருன்பான்பான மக்கள் மோட்டார் சைக்கில் , கார் போன்ற சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுப்போக்குவரத்தினை மக்கள் நாட்டம் செலுத்தாமையின் காரணமாக தனியார் பேரூந்துகளின் உரிமையாளர்கள் பாரிய நட்டத்தின் மத்தியிலேயே சேவையில் ஈடுபட்டு வருவதுடன் இலங்கை போக்குவரத்து வவுனியா சாலையின் வருமானமும் குறைவடைந்துள்ளது.

hey