வவுனியாவில் முறிந்து வீழ்ந்த மரத்தில் மோதுண்டு கன ரக வாகனம் விபத்து : சாரதி படுகாயம்வவுனியாவில்

வவுனியா கண்டி வீதி தபால் நிலையத்திற்கு முன்பாகவிருந்த பாரிய மரம் இன்று(03.12.2020) அதிகாலை மூன்று மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்துடன் வீதியில் வீழ்ந்து கிடந்த மரத்துடன் பாராவூர்தியும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

வவுனியாவில் நிலவிவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக தபால் நிலையத்திற்கு முன்பாக காணப்பட்ட பழமைவாய்ந்த மரமொன்று வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்தது.இந்நிலையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையை அவதானிக்காது வந்த பார ஊர்தியொன்று குறித்த மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அனர்த்தம் காரணமாக வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நகரசபை ஊழியர்கள் குறித்த மரம் வீழ்ந்துள்ள இடத்தினை பார்வையிட்டு அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

hey