சற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடல்! விபரம் உள்ளேசீரற்ற வானிலை காரணமாக வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர், பி.எம்.எஸ். சார்ள்ஸ் இன்று ஊடகங்களுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

hey