வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 5 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்புவவுனியாவில்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கந்தசாமிநகர் பகுதியில் வசிக்கும் 5 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தினை நேர்ந்த அமரர்களான நாகலிங்கம் சோமசுந்தரம் , சோமசுந்தரம் சற்குணம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரின் மகன் சந்ரரூபன் அவர்களின் நிதியுதவியில் வவுனியா ஊடகவியலாளர்களான கதீஷன் மற்றும் சஜீவன் ஆகியோர் நேரில் சென்று அக் குடும்பங்களுக்கு வழங்கி வைத்தனர்.

கந்தசாமி நகரில் வசிக்கும் வயோதிப குடும்பம் , ஊனமுற்றவர்களை கொண்ட குடும்பத்தினர் , வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தினர் , பெண் தலைமைத்துவ குடும்பம் என தெரிவு செய்யப்பட்ட ஜந்து குடும்பங்களுக்கு (ஒர் குடும்பத்தினருக்கு 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதியும் சிறுதொகை பணமும்) வழங்கி வைக்கப்பட்டன

hey