வவுனியாவில் திடீரேன இயக்கும் ரயில்வே சமிச்சைவவுனியாவில்

வவுனியா – மன்னார் வீதியிலுள்ள ரயில்வே கடவையில் சமிச்சைகள் திடீர் திடீரேன இயங்குவதினால் பொதுமக்கள் அச்சத்தினுடனே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்று தாக்கம் காரணமாக வடபகுதிக்கான ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த கடவையிலுள்ள ரயில்வே கடவையின் சமிச்சை மாத்திரம் திடீர் திடீரேன தன்னியக்கமாக இயங்குவதினால் பொதுமக்கள் அச்சத்தின் மத்தியிலேயே ரயில்வே கடவையினை கடக்கின்றனர்.

ரயில்வே கடவையின் கதவு உயர்த்தியவாறு காணப்படுவதுடன் சிவப்பு சமிச்சை மாத்திரம் இயங்குகின்றன. எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

hey