வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருபது பேருக்கு கொரோனா தொற்று உறுதி..வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு வவுனியா – பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் இருபது பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் அண்மையில் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பல இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா – பெரியகட்டு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களுக்க நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் இருபது பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதானா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

hey