வவுனியா சுந்தரபுரம் வீதியோரத்தில் 256 மரக்கன்றுகள் நாட்டி வைப்புவவுனியாவில்

வவுனியா சுந்தரபுரம் பிரதான வீதியினை இயற்கையுடன் கூடிய சூழலாக மாற்றும் நோக்கில் வீதியோரங்களில் 256 மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன

சாஸ்திரிகூழாங்குளம் கிராம அலுவலர் நா.ஸ்ரீதரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாஸ்திரிகூழாங்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ,

பட்டதாரி பயிலுனர்கள், வனவளதினைக்கள உத்தியோகத்தர் , பொதுசுகாதார பரிசோதகர், சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினர், சுந்தரபுரம் பொது அமைப்பினர் மற்றும் சுந்தரபுரம் பொதுமக்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டினர்.

இதன் போது வீதியோரங்களில் கொன்றை, நிழல்வாகை , புங்கை , மலைவேம்பு , இலுப்பை மற்றும் சமண்டலை ஆகிய மரங்கள் நாட்டப்பட்டன.

hey