பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்பட மறுத்தால்…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைதனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள எவரும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்பட மறுத்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் எவருக்காவது நோய்கள் ஏற்பட்டால் பீ.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை எவராவது மறுத்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

hey