வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர்கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 93 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

டுபாயிலிருந்து 52 பேர், கட்டாரிலிருந்து 41 பேர் உள்ளிட்ட 93 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இன்று கட்டாரின் டோஹா நகரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம், 41 பேர் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரிலிருந்து UL 226 எனும் விமானம் மூலம் 52 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

hey