பாடசாலை மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் : அஜித் ரோஹன!2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகள் பொலிஸாரினால் ஒழுங்குபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலை நேரம் மற்றும் வகுப்பறை நிலைமைகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறையினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பஸ், வேன் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுமெனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வாகனங்களுக்குள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டுமெனவும், இது குறித்து இன்று முதல் அதிக கவனம் செலுத்தப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

hey