நம்ம ஒபாமா சின்ன வயசுல இருந்தே இராமாயணம், மகாபாரதம் கேட்டு தான் வளர்ந்தாராம்…? நம்புற மாதிரியா இருக்கு…?இந்தோனேசியாவில் ,,,,,,

இந்தோனேசியாவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் காவிய இந்து கதைகளைக் கேட்டு தனது குழந்தை பருவம் அமைந்ததால், எப்போதும் இந்தியா என் மனதில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டில் அதிபராகி வருகை தந்ததற்கு முன்னர் தான் ஒருபோதும் இந்தியாவுக்கு வந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார், ஆனால் அந்த நாடு ‘எனது கற்பனையில் எப்போதும் ஒரு சிறப்பான ஒரு இடத்தைப் பிடித்திருந்தது’ எனவும் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதியும், இரண்டாயிரம் தனித்துவமான இனக்குழுக்களும், ஏழு நூறுக்கும் மேற்பட்ட மொழிகளும் பேசப்படுகிறது ஆகியனவே இந்தியாவின் சிறப்பாக இருக்கலாம்” என்று ஒபாமா தனது சமீபத்திய புத்தகமான “எ பிராமிஸ்டு லேண்டு” புத்தகத்தில் எழுதியுள்ளார்.

குழந்தைப் பருவத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை படித்ததற்கு, கிழக்கு மதங்களில் எனக்குள்ள ஆர்வம் காரணமாகவோ அல்லது பாகிஸ்தான் மற்றும் இந்திய கல்லூரி நண்பர்கள் காரணமாகவோ இருக்கலாம்.

இதுதான் பருப்பு மற்றும் கீமாவை சமைக்க எனக்கு கற்றுக் கொடுத்தது, மேலும் பாலிவுட் திரைப்படங்களுக்கு என்னைத் திருப்பியது “என்றும் ஒபாமா எழுதியுள்ளார்.

hey