வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 60 மாணவர்கள் சித்தி : குவியும் பாராட்டுகள்வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 60 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் சித்தி வீதம் 98 வீதமானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 185 மாணவர்களில் 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மேலும் 150 புள்ளிகளுக்கு மேல் 90 மாணவர்களும் (49 %) , 100 – 149 புள்ளிகளுக்கு இடையில் 82 மாணவர்களும் (44 %) , 70 – 99 புள்ளிகளுக்கு இடையில் 10 மாணவர்களும் (5.5 %) , 70 புள்ளிகளுக்கு கீழ் 3 மாணவர்களும் (1.5 %) பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.

குறித்த பாடசாலையில் அதி கூடிய புள்ளியாக 190 புள்ளிகளை ஓர் மாணவர் பெற்றுள்ளார்.

hey