வவுனியாவில் தனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியாவில்

வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (16.11) உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து வருகை தந்த நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக கடந்த வியாழக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
குறித்த பெண்ணிற்கு கொரோனா நோய் அறிகுறி தென்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்படடு சிகிச்சை வழங்கப்பட்டதுடன், இன்று (16.11) பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பிசீஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படடுள்ளது. இதனையடுத்து குறித்த நோயாளரை கொரோனோ தடுப்பு வைத்தியசலைக்கு இடமாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey