வவுனியாவில் பொலிஸாரின் கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்ற தீபாவளி விசேட வழிபாடுகள்வவுனியாவில்

உலக வாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் வவுனியா மாவட்டத்திலும் இன்று (14.11.2020) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவிட் -19 தொற்று காரணமாக வவுனியாவிலுள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரித்து காணப்படுவதுடன் சில ஆலய வாயில்களையும் பொலிஸார் மூடி குறிப்பிடத்தக்களவான பக்தர்கள் மாத்திரமே ஆலயத்தினுள் செல்ல அனுமதி வழங்கி வருகின்றனர்.

இந்து கோவில்களில் விரத நிறைவு பூசைகள் இடம்பெற்று வருவதனால் குறிப்பிடத்தக்க பொதுமக்களை தவிர ஏனையவர்கள் ஆலயங்களுக்கு செல்ல முடியாத நிலையில் திரும்பிச் சென்றதினையும் அவதானிக்க கூடியதாகவிருந்தது.

மேலும் ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய கைசுத்தம் செய்வதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஆலயத்திற்கு வருகை தருபவர்களின் பெயர் விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

கட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் வவுனியாவில் வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம் , கந்தசுவாமி ஆலயம் , குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் போன்ற பல ஆலங்களில் தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

hey