வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பங்களுடன் குவிந்த இளம் தொழில் முயற்சியாளர்கள்வவுனியாவில்

காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

100000 இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச காணித்துண்டுகள் வழங்குவதற்கான விண்ணப்படிவம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதித்திகதி 15.11.2020 உடன் நிறைவுக்கு வருகின்றது.

இதனையடுத்து இன்றையதினம் (13.11) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் 300க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்படிவத்தினை ஒப்படைப்பதற்காக வவுனியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கோவிட் – 19 மற்றும் மக்களின் அசோகரியங்களை குறைக்கும் வகையில் வவுனியத பிரதேச செயலக ஊழியர்கள் செயலக வாயிலில் நின்று இலவச விண்ணப்டிவங்களை விநியோகம் செய்ததுடன் நிரப்பட்ட விண்ணப்படிவங்களையும் பெற்றுக்கொண்டனர்.

hey