தனியார் நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களை மீளச்செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்புதனியார் நிறுவனங்களின் ஊழியர்களினால் பெறப்பட்ட தனிநபர் கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால எல்லையினை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் சலுகைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நிதி சாரா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் தொகையினை மீளச் செலுத்துவதற்கான காலத்தை மேலும் ஆறு மாதகாலத்திற்கு நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey