கொழும்பில் 26 வீதமான மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் : ஆபத்தான கட்டத்தில் கொழும்பு!நேற்று வரையில் கொழும்பு நகர எல்லைக்குள் கொரோனா தொற்றுக்குள்ளான 3217 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு நகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர எல்லைக்குள் 26 வீதமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் சீன துறைமுகத்தில் 52 பேரும், துறைமுக நகரத்தில் 32 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பரவலாக மேற்கொள்ளப்பட்ட PCRபரிசோதனை முடிவுகளில் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.
நகர எல்லைக்குள் 6 இலட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 30 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகுவதற்கு வாய்ப்புள்ளது.

கொழும்பு நகரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey