வழுக்கை தலையை மறைத்து ஏமாற்றி என்னை திருமணம் செய்து விட்டார் : மனைவி பரபரப்பு தகவல்வழுக்கையை மறைத்து…..

மும்பையைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கு 29 வயது நபருடன் திருமணம் நடந்துள்ளது.

கணவனுக்கு வழுக்கை இருப்பது திருமணத்திற்கு பிறகே மனைவிக்கு தெரியவந்துள்ளது. வழுக்கையை மறைத்து விக் வைத்து அவர் திருமணம் செய்துள்ளார்.

உண்மையை மறைத்து தன்னை ஏமாற்றியதை அறிந்த மனைவி மிகவும் ஆத்திரமடைந்துள்ளார்.

இதனையடுத்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், மொபைல் போனை ஹேக் செய்துள்ளதாகவும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.

மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கணவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவரது குடும்பத்தினர் ஜாமீன் கோரியுள்ளதால், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

hey