வவுனியா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட பிராத்தனை நிகழ்வுவவுனியா……..

நாட்டையும் ,மக்களையும் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுமாறு கோரி வவுனியா பெரியபள்ளி வாசலில் விசேட பிராத்தனை ஒன்று இன்று(8) இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றது

நாட்டில் கொரோனா நோயின் தாக்கமானது அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து ஆலயங்களிலும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்ததை அடுத்து இலங்கையில் உள்ள பல்வேறு ஆலயங்கள், கிறிஸ்தவதேவாலயங்கள் ,மற்றும் பள்ளிவாசல்கள் இவற்றுடன் விகாரைகளிலும் இந்த விசேட வழிபாடுகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றன

இதனைத்தொடர்ந்து இந்த வழிபாடு இன்று வவுனியா பெரிய பள்ளிவாசலிலிலும் சமூக இடைவெளியை பின்பற்றி இடம்பெற்றிருந்தது.

hey