வவுனியா பொது வைத்தியசாலை வீதியில் அமுல்படுத்தப்பபட்ட புதிய போக்குவரத்து நடைமுறைவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் புதிய போக்குவரத்து நடை முறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையில் வாகன நெரிசல் ஏற்படுவதினால் அவசர தேவைகளின் போது நோயாளர் காவு வண்டி செல்வதற்கு கூட கடினமான நிலை காணப்பட்டது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியினுள் சிறிய மற்றும் பாரிய ஊர்திகள் (பொருட்கள் ஏற்றும் வாகனங்கள்) செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியுடனான வாகனத்தடை தொடர்பான சமிச்சையும் வவுனியா நகர சுற்றுவட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

hey