வவுனியா மாவட்ட பொது மக்களுக்கு சுகாதார திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்புவெளிமாவட்டங்களிலிருந்து

வவுனியாவிற்கு வெளிமாவட்டங்களிலிருந்து உங்களது வீடுகளுக்கு வருகை தரும் உறவினர்கள், நண்பர்கள் தொடர்பான தகவல்களை வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு வழங்குமாறு வவுனியா பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தால் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .

இன்று காலை நகர்ப்பகுதியில் இவ்வாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வங்கிகள் , அரச நிறுவனங்கள் , தனியார் துறைகளுக்குச் செல்லும் பொது மக்கள் தமக்கிடையே சமூக இடைவெளிகளைப் பினபற்றி ,கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுதல் வேண்டும்.

அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கைகழுவி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் குடும்பத்தில் ஒருவர் சென்று தமக்குரிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துகொள்ளுமாறும்,சிறுவர்களை தேவையின்றி வெளியே அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும்,

கொரோனா நோய் தொற்றிலிருந்து உங்களையும் குடும்பத்தையும் பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு, உங்கள் வீடுகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தரும் உறவினர்கள் நண்பர்கள் தொடர்பான தகவல்களை பிராந்திய சுகாதாரத்திணைக்களத்திற்கு வழங்கி கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார திணைக்களத்தினால் மேலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

hey