வவுனியாவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு : முக்கிய அமைச்சர்கள் வவுனியா வருகைவவுனியாவிற்கு…

கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக்கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் குண்டு செயலிழப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர் , பொலிஸ் பிரிவினர் ஆகியோரினால் மாவட்ட செயலகத்தின் பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய குறித்த கூட்டம் இன்றையதினம் (07.11.2020) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ , வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த , கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா , மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்பல ஆகியோர் உள்ளிட்டவர்கள் குறித்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.

மேலும் குறித்த கூட்டத்தில் வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் , குலசிங்கம் திலீபன் , செல்வம் அடைக்கலநாதன் , சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் , மாவட்ட அரச அதிபர்கள் , பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

hey