வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பாரிய நிதி மோசடி : விசாரணை ஆரம்பம்நிதி ஊழல் மோசடி

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பெரும் நிதி ஊழல் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து மாகாண கல்வித் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நிதிக் கிளையில் பாணியாற்றிய சில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்த நிதி மோசடி இடம்பெற்று வந்த நிலையில், தற்போது குறித்த நிதிக்கிளையில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய உத்தியோகத்தர் ஒருவர் கடமையேற்ற நிலையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகள் முழுமையாக தற்போது இடம்பெற்று வருகின்றன.

hey