க ணவ ணுடன் ஒன் றாக தி ரு மண நாள் கொ ண் டா ட கா த்தி ருந் த பெ ண் : தி டீ ரெ ன வ ந் த அ தி ர் ச்சி செ ய் திஇந்தியாவில் முத லாம் ஆண்டு தி ருமண நாளை கண வரு டன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் உ யிரிழந்த சம்பவம் சோக த்தை ஏ ற்படுத்தியுள் ளது.

கேரளாவை சேர்ந்தவர் சுதீஷ். இவருக்கும் அஞ்சு தேவ் (26) என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் முதலாம் ஆண்டு திருமண நாள் வந்தது.

அஞ்சு சில மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமண நாளை கொண்டாட கணவர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி திருமண நாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் சுதீஷ் செய்திருந்தார்.

இந்த நிலையில் அஞ்சு தனது பெற் றோர் மற்றும் சகோ த ரருடன் காரில் கணவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நெடுஞ்சாலையில் கார் சென்று கொ ண்டிருந்த போ து வேகமாக வந்த லொறி மீது மோதியது.

இதில் அஞ்சு இரத்த வெள்ளத்தில் சம்ப வ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற மூவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நேரம் போய் கொண்டே இ ருந்த நிலையில் மனைவி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையில் சுதீஷ் இருந்த போது அவருக்கு பொலிசார் போன் செய்தனர்.

போனில் அஞ்சு உ யி ரிழந்த செய்தியை சொன்ன போது சுதீஷ் அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து அஞ்சுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

hey