வவுனியா நெளுக்குளம் பகுதிக்கு பல மாதங்களுக்கு பின்னர் நிரந்தர கிராம சேவையாளர் நியமனம்வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடந்த பல மாதங்களாக நிரந்தர கிராம சேவையாளர் இன்மையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் தற்போது அப்பகுதிக்கு நிரந்தர கிராம சேவையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெளுக்குளம் கிராமசேவையாளராக கடமையாற்றிய பெண் கிராம சேவையாளர் ஒருவருக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்னர் வேறு பகுதிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் குறித்த கிராம சேவையாளர் பிரிவில் பதில் கிராம சேவையாளராக பலர் கடமையாற்றியிருந்த போதிலும் அவர்களிடமிருந்து சேவைகளை பெற்றுக்கொள்வதில் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி மக்களினால் வவுனியா பிரதேச செயலாரிடம் விடுத்த கோரிக்கைக்கமைய நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கு நிரந்தர கிராம சேவையாளராக சாந்தரூபன் இன்று காலை அவரது கடமைகளை பொறுப்பேற்றார்.

மேலும் நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தரும் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அபிவிருத்தி உத்தியோகத்தராக அருள்மொழி என்பவரும் இன்று அவரது கடமைகளை பொருப்பேற்றனர்.

நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களின் நன்மையினை கருத்தில் கொண்டு செயற்பட்ட பிரதேச செயலாளருக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

hey