வவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்வதற்கு தடைவவுனியாவிலிருந்து

வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவை இடம்பெறுவதுடன் மாகாணங்கிடையிலான பேரூந்து சேவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகியன தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக உள்ளுர் சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதுடன் வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்கு 10க்குட்ட பேரூந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளன மேலும் மாகாணக்கிடையிலான சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியா பேரூந்து நிலையம் மக்களின் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.

hey