வவுனியாவில் வழிபாட்டில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தலில்வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில்பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 15 பேரும் இன்று சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் – 19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது வெளி மாவட்டவர்களுடன் இணைந்து வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் உள்ள சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதாக நேற்று பூசகர் உள்ளிட்ட 15 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்களிடம் தனிமைப்படுத்தல் சட்டமீறலின் கீழ் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார் கடு ம் எ ச்சரிக்கையுடன் 15 பேரையும் விடுவித்தனர்.

அத்துடன் குறித்த 15 பேரையும் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில், கனகராயன்குளம் பகுதியில் இருவரும், வவுனியாவில் 8 பேரும்,புளியங்குளத்தில் 5 பேரும் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

hey