வவுனியா வீதியில் புதிதாக அமுல்படுத்தப்பபட்ட போக்குவரத்து விதிமுறைவவுனியா கண்டி வீதியில்

வவுனியா கண்டி வீதியில் அதிகரித்து வரும் வீதி வி பத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் வரையிலான பகுதியில் தினசரி 3க்கு மேற்பட்ட வி பத்துக்கள் இடம்பெறுகின்றன. இதனையடுத்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி காமினி திஸாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய கண்டி வீதியில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் வரையிலான வீதிப்பகுதியில் வாகனம் முந்திச்செல்ல தடை விதிக்கப்பட்டு சுமார் 1கிலோ மீற்றர் தூரத்திற்கு வீதியில் தொடர் வெள்ளைக்கோடு போடப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக வி பத்துக்கள் இடம்பெறும் இடம் அவதானமாக வாகனத்தினை செலுத்தவும் என்ற வசனத்தினை தாங்கிய விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

hey