வவுனியா இளைஞரின் கொரோனா தொற்று பீ.சி.ஆர் முடிவுகள் வெளியாகியதுவவுனியா கூமாங்குளம்

வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றையதினம் (30.10.2020) கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்முடிவு இன்று (31.10) இரவு வெளியாகிய நிலையில் பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என வெளியாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் அண்மையில் கொழும்பு சென்று வந்திருந்தமையினால் தனிமைப்படுத்தப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

hey