வவுனியாவில் தொடரும் கொரோனாவின் எதிரொலி : வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்துழைக்குமாறு கோரிக்கைவவுனியாவில்

வவுனியா வடக்கில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டவரிகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ள நிலையில் வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் கேட்டுள்ளனர்.

வவுனியா வடக்கில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஊழியர்களில் மூவருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தொடர்ச்சியான பிசீஆர் பரிசோதனைகளில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த கொரோனா தொற்றை சமூக பரவலாக பரவ விடாது தடுக்கும் பொருட்டு சுகாதார துறையினர் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதடினப்படையில் வவுனியா வடக்கின்

நைநாமடு, ஒலுமடு, நெடுங்கணி சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களைப் பூட்டி பிசீஆர் பரிசோதனைக்கு ஒத்துழைத்து சமூக பரவரை தடுக்க உதவுமாறு வவுனியா வடக்கு சுகாதார துறையினர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளனர்.

மாகா தனியார் நிறுவனம் வழக்கிய ஒத்துழைப்பு காரணமாக சமூக பரவலை தடுக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார துறையினர், வர்த்தகர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றனர்.

hey