வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை : அதிகம் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற 2 தினங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இ ரத்தங்கள் முடிவடையவுள்ளமையினால் அவசரமாக குருதியினை வழங்குமாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இ ரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது. எனினும் சில குருதிவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன்படி ழு,யு,டீ போன்ற எதிர்மறை இரத்தவகைகளுக்கு கூடுதல் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்கு பொது மக்கள் முன்வரவேண்டும் எனினும் மக்களிடையே இரத்ததானம் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.

மேலும் இரத்ததானம் தொடர்பான விளக்கத்தினை பொதுமக்களுக்கு ஊடகங்களே வழங்க முன்வரவேண்டும் என்றும் மேலதிக தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியூடாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 18 – 60 வயதுக்குட்பட்ட 50 கிலோ நிறையுடைய ஆரோக்கிமான நிலையிலுள்ள சுகதேகி ஒருவரால் இரத்ததானம் செய்து கொள்ள முடியும் என்பதை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

hey