வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் வவுனியாவில் காலமானார்!!முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் மாரடைப்பால் காலமானார். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது.

1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வை.பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார்.

1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 69 ஆவது வயதில் வவுனியாவில் காலமானார்.

hey