கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பயணித்த மேலும் பல பேருந்துகள் தொடர்பில் வெளியானது விபரம்!கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பயணித்த ஆறு பேருந்துகள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் பயணித்த பேருந்துகள் தொடர்பான விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், கொழும்பு – மெதகம பேருந்து- ND 4890, மாகும்புர – காலி பேருந்து-ND 2350, கடவத்த – அம்பலாங்கொட பேருந்து-ND 0549, கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து-ND 6503, எல்பிட்டிய – கொழும்பு பேருந்து-ND 9788 மற்றும் காலி – கடவத்த பேருந்து-NF 7515 போன்றவை இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதுசொகுசு பேருந்துகளினுள் பயணிகளை ஏற்றும் போது அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போது பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

hey