வவுனியாவில் அடிப்படை வசதிகளற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்புவவுனியாவில்

வவுனியா மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் விளையாட்டுக்கழகங்களை இனங்கண்டு அவற்றின் அடிப்படை உபகரண தேவைகளை முதற்கட்டமாக வழங்கி வைக்கும் நோக்கில் சமூக ஆர்வலர் சாந்தி நிரோஷ்குமார் அவர்களின் நிதியுதவியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஓமந்தை , மதியாமடு , சேமமடு , நாவற்குளம் மற்றும் பல கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஏழு விளையாட்டுக் கழகங்கள் பங்குபெற்ற இந்த தொடரில்

பரபரப்பான இறுதிப்போட்டியில் சேமமடு நாகதம்பிரான் அணியுடன் மோதிய ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகம் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது.

வெற்றிபெற்ற அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் சமூக ஆர்வலர் சாந்தி நிரோஷ்குமார் அவர்களின் நிதியுதவியில் அவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும்

பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன அத்துடன் கலந்து கொண்ட அனைத்து அணியினருக்கும் (ஏழு விளையாட்டுக் கழகங்கள்) மொத்தமாக ஒரு லட்சம் ரூபாவிற்கு மேல் பெறுமதி கொண்ட அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பாவனையில் இல்லாத சேமமடு விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட சமூக ஆர்வளர் சாந்தி நிரோஷ்குமார்

நேரடியாக விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்‌ஷ அவர்களின் அபிவிருத்திச் செயற்றிட்டங்களில் உள்வாங்கி விரைவில் புனரமைப்பு செய்வதாக உறுதியளித்து சென்றிருந்தனர்.

hey